< Back
சினிமா செய்திகள்
ஷாருக்கானின் டங்கி படத்திற்கான முன்பதிவு தொடங்கியது
சினிமா செய்திகள்

ஷாருக்கானின் 'டங்கி' படத்திற்கான முன்பதிவு தொடங்கியது

தினத்தந்தி
|
19 Dec 2023 11:27 PM IST

திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அட்வான்ஸ் புக்கிங் மூலம் முன்பதிவு விரைவாக நிறைந்து வருகிறது.

ராஜ்குமார் ஹிரானியின் 'டங்கி' திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் தருணத்தில் இப்படத்தை காண்பதற்காக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்தில் ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர். உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் 'டங்கி'யில் நடித்துள்ளனர்

உலகம் முழுவதும் இந்த படத்தை காண முன்பதிவு தொடங்கியுள்ளது. அட்வான்ஸ் புக்கிங் மூலம் முன்பதிவு விரைவாக நிறைந்து வருகிறது.

'டங்கி' படத்தின் முன்பதிவுகள் வெளிநாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் செய்திகள்