< Back
சினிமா செய்திகள்
ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்

தினத்தந்தி
|
30 Jan 2023 6:12 PM IST

பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் உள்ளனர்.

ஜெயிலர் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். பான் இந்தியா படமாக ஜெயிலர் உருவாவதால் பிறமொழி நடிகர்களையும் நடிக்க வைக்கிறார்கள். கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் புஷ்பா மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர்.

சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தில் நடித்து இருந்தார்.

ரஜினியுடன் ஜாக்கி ஷெராப் நடிப்பதாக இருந்தால் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ஜெயிலர் பெறும். ரஜினியும், ஜாக்கி ஷெராப்பும் 1987-ல் வெளியான 'உத்தர் தக்ஷின்' இந்தி படத்தில் இணைந்து நடித்து இருந்த னர்.

மேலும் செய்திகள்