சூர்யாவின் புதிய படம்
|பிரபல இந்தி இயக்குநர் பரூக் கபீர் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் வந்த முந்தைய படங்களான சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகியவை வரவேற்பை பெற்றன. சூரரைப்போற்று படத்துக்காக சூர்யாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கமல்ஹாசனின் விக்ரம் பட கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனாக வந்தார். தற்போது பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகும் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.
இந்த படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து சிறுத்தை சிவா, ஞானவேல், சுதா கொங்கரா ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல இந்தி டைரக்டர் பரூக் கபீர் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.