< Back
சினிமா செய்திகள்
ரூ. 10 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கிய நடிகை மிருனாள் தாகூர்
சினிமா செய்திகள்

ரூ. 10 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கிய நடிகை மிருனாள் தாகூர்

தினத்தந்தி
|
21 Feb 2024 1:10 PM IST

நடிகை மிருனாள் தாகூர் மும்பையில் ரூ. 10 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த நடிகை மிருணாள் தாகூர். இவர் தொலைக்காட்சி தொடர் வழியாக சினிமாவுக்கு வந்தவர். இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடித்த சீதா ராமம் படம் நாடு முழுவதும் அவருக்கு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.

மிருணாள் தாகூர் அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் மும்பையில் 10 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தின் குடும்பத்தினரிடம் இருந்து மும்பையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் வாங்கியுள்ளார். மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் அமைந்துள்ள அந்த 2 வீடுகளும் அருகருகே அமைந்திருப்பவையாகும்.

மிருணாள் தாகூர் தனது தந்தையுடன் சேர்ந்து அந்த வீடுகளை கடந்த ஜனவரி 25ம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த வீடுகள் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்