< Back
சினிமா செய்திகள்
உடல் அசதியா, தலைவலியா; இருக்கவே இருக்கு யோகா... பிரபல நடிகை அசத்தல்
சினிமா செய்திகள்

உடல் அசதியா, தலைவலியா; இருக்கவே இருக்கு யோகா... பிரபல நடிகை அசத்தல்

தினத்தந்தி
|
10 March 2024 2:19 PM IST

அர்த்த தனுராசனம், தனுராசனம் உள்ளிட்ட பல வகையான யோகாசனங்களை செய்யும் சில புகைப்படங்களை நடிகை லட்சுமி மஞ்சு பகிர்ந்து உள்ளார்.

விசாகப்பட்டினம்,

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மஞ்சு. குண்டூர் டாக்கீஸ், லட்சுமி பாம், ஒய்ப் ஆப் ராம் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு தவிர தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் வெளியான மான்ஸ்டர், தமிழில் காற்றின் மொழி ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். குண்டெல்லோ கோதரி, நேனு மீகு தெலுசா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கடல் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில், அர்த்த தனுராசனம், தனுராசனம் உள்ளிட்ட பல வகையான யோகாசனங்களை அவர் செய்வது போன்ற காட்சிகள் உள்ளன.

அந்த பதிவில், சமீபத்திய தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் போராட்டங்கள், அன்பு நண்பர்களின் இழப்பு மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி போன்ற விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இவற்றில் இருந்து விடுபட்டு இயல்பாக வாழ்வதற்கு யோகா பயனளிக்கிறது. அது தனக்கு ஆறுதல் அளிக்கிறது என பகிர்ந்துள்ளார். 2 வாரங்களாக நடந்த பல்வேறு சம்பவங்களும் வாழ்க்கையின் விளிம்புக்கே தன்னை கொண்டு வந்து விட்டன என கூறும் மஞ்சு, அவற்றில் இருந்து வெளிவர அழகிய இந்த யோகா பயனளித்தது.

வாழ்வில் இந்த அழகிய தருணங்களை கொண்டுள்ளதற்காக கடவுளுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார். யோகா செய்வதன் வழியே உடல் மட்டுமின்றி மனமும் தூய்மை அடைவதுடன், கட்டுக்கோப்பாகவும் இருக்கும் என அவர் கூறுகிறார்.

மேலும் செய்திகள்