< Back
சினிமா செய்திகள்
பார்க்கிங் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி... இயக்குனருக்கு தங்கக்காப்பு பரிசளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்...!
சினிமா செய்திகள்

பார்க்கிங் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி... இயக்குனருக்கு தங்கக்காப்பு பரிசளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்...!

தினத்தந்தி
|
16 Dec 2023 2:30 PM IST

பார்க்கிங் படத்தின் வெற்றிவிழா சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை,

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிக்ஜம் புயல் பாதிப்பு காரணமாக படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் விமர்சன ரீதியாக இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தின் இயக்குனர் ராம்குமாருக்கு தங்கக்காப்பு ஒன்றை பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் ராம்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இந்த அன்பின் அடையாளத்திற்கு நன்றி ஹரிஷ் கல்யாண் அண்ணா. இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு கையில் காப்பு அணிவது பிடிக்கும் என்பதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்