< Back
சினிமா செய்திகள்
பிளாக்பஸ்டர் வெற்றி... கேக் வெட்டி கொண்டாடிய ஜோ படக்குழு...!
சினிமா செய்திகள்

பிளாக்பஸ்டர் வெற்றி... கேக் வெட்டி கொண்டாடிய 'ஜோ' படக்குழு...!

தினத்தந்தி
|
30 Nov 2023 3:41 PM IST

நடிகர் ரியோ ராஜ் நடித்துள்ள 'ஜோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜோ'. இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான 'ஜோ' திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் ரியோ ராஜ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் படம் சிறப்பாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை படத்தின் தயாரிப்பாளர் படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில், 'நன்றி சக்திவேலன் சார், எங்களுடன் வெற்றியை கொண்டாடியதற்கு, காதலை கொண்டாடியதற்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்