பில்லியன் குதிரைகள்... 'மதிமாறன்' படத்தின் புதிய பாடல் வெளியானது..!
|'மதிமாறன்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
சென்னை,
இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மந்த்ரா வீரபாண்டியன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் லவ் டுடே மற்றும் எல்.ஜி.எம். படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகை இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். உருவகேலியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், பாவா செல்லதுரை, இ.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.
மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள 'மதிமாறன்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் 'பில்லியன் குதிரைகள்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞானகரவேல் எழுதியுள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.