< Back
சினிமா செய்திகள்
14 வருடங்களுக்கு பிறகு தமிழில்... - சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்
சினிமா செய்திகள்

14 வருடங்களுக்கு பிறகு தமிழில்... - சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

தினத்தந்தி
|
26 April 2024 12:20 PM IST

எஸ்.கே. 23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

சிவகார்த்திகேயன் 'அயலான்' படத்தின் வெற்றியை அடுத்து, அமரன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய அமரன் படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்.கே. 23 படத்தில் நடித்து வருகிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது. எஸ்.கே. 23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் எஸ்.கே. 23 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிஜு மேனன் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பிஜு மேனன் பேசியதாவது, 'ஆம் நான் அந்த படத்தில் உள்ளேன். இது ஒரு பெரிய கதை. இப்படத்தில் நடிக்க ஒரு வருடத்திற்கு தேதி கொடுத்துள்ளேன். வேறு எதுவும் இப்போதைக்கு என்னால் தெரிவிக்க முடியாது. ஆனால், படம் முழுவதும் என் பாத்திரம் இருக்கும். இவ்வாறு பேசினார்.

இது இவர் 14 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் படமாகும். கடைசியாக தமிழில், 2010-ம் ஆண்டு வெளிவந்த 'போர்க்களம்' படத்தில் நடித்தார்.

முன்னதாக எஸ்.கே. 23 படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்து வருவதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்