< Back
சினிமா செய்திகள்
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு...?
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு...?

தினத்தந்தி
|
10 Sept 2023 5:14 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

சென்னை,

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த புரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், அதில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், மாகாபா ஆனந்த், நடிகை ரோஷினி, 'குக்கு வித் கோமாளி' புகழ் ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பப்லூ பிருத்வீராஜ், ரேகா நாயர் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் இந்த சீசனுக்கான உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

மேலும், உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் விஜய் டிவி ஜாக்குலின், பயில்வான் ரங்கநாதன் மற்றும் டிரைவர் ஷர்மிளா உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்