தெலுங்கில் அறிமுகமாகும் பிக்பாஸ் பிரபலம் மாயா
|பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாயா தற்போது தெலுங்கில் தனது முதல் படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'வானவில் வாழ்க்கை' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். அதைத் தொடர்ந்து மகளிர் மட்டும், தொடரி, வேலைக்காரன், விக்ரம், லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் பல திரைப்பட வாய்ப்புகளை பெற்று கொடுத்துள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாயா தற்போது தெலுங்கில் தனது முதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் இயக்குகிறார். கதாநாயகனாக ராம்ஷ் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ர்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படத்திற்கு பைட்டர் ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், படம் குறித்து மாயா கூறுகையில்,
படத்தில் எனது கதாபாத்திரம் நகைச்சுவையானதாகவும், வேடிக்கையானதாகவும், மர்மமானதாகவும் இருக்கிறது. இதில் நான் நடிப்பது நன்றாக எழுதப்பட்ட பெண் பாத்திரத்தில். படத்தில் மிகவும் வித்தியாசமான நகைச்சுவை உணர்வு உள்ளது .
இது எனது முதல் தெலுங்கு படம் மட்டுமல்ல, நான் கதாநாயகியாக நடிக்கும் முதல் படம். நான் பாண்டிச்சேரியில் தியேட்டரில் சிறிது காலம் இருந்தேன். படத்தின் இயக்குனர் ஒரு தியேட்டர் பயிற்சியாளர். அதனால், அவர் என்னைப் பற்றி நன்கு அறிந்துள்ளார். என் நடிப்பை பார்த்து நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்துள்ளார். என்றார்