< Back
சினிமா செய்திகள்
பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி...! என் உயிருக்கு ஆபத்து; அன்புகாட்ட யாரும் இல்லை என உருக்கம்!
சினிமா செய்திகள்

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி...! என் உயிருக்கு ஆபத்து; அன்புகாட்ட யாரும் இல்லை என உருக்கம்!

தினத்தந்தி
|
30 Jun 2022 5:49 PM IST

பிரபல நடிகையும், ரோஹித் சர்மாவின் முன்னாள் காதலியுமான சோபியா ஹயாத், இந்தியில் 'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

மேட்ரிட்

'பிக் பாஸ்' புகழ் சோபியா ஹயாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் முன்னாள் காதலியுமான சோபியா ஹயாத், இந்தியில் 'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார், மற்றும் 'சூப்பர்டூட்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஆவார்.

"நான் எனது கடந்த கால வாழ்க்கையை ஆராயவும், என் ஆன்மாவுடன் இணைந்திருக்கவும் 21 நாட்கள் உண்ணாமல் நோன்பு இருக்கப்போகிறேன்" என்று தனது ரசிகர்களிடம் தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பினார் சோபியா ஹயாத்.

இருப்பினும், அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் அவருடைய உடல்நிலையை பாதித்தது. இதன் காரணமாக இப்போது அவர் ஸ்பெயினில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோபியா உண்ணாவிரதத்தை ஆன்மீக நடைமுறையாக பின்பற்றினார். இருப்பினும், உண்ணாவிரத செயல்முறை அவளுக்கு பொருந்தவில்லை, மேலும் அவர் உடலில் உப்பு அளவு குறைந்து மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோபியா கூறியதாவது, "நான் தனியாக இருக்கிறேன், என் குடும்பம் என்னுடன் இல்லை, என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர் கூறினார். ஆதலால் எனக்கு அன்புகாட்ட வேண்டும்.

நான் இதற்கு முன்பு கூட நோன்பு கடைபிடித்திருக்கிறேன். மேலும் இது எனது முந்தைய பிறவிகளைச் சந்திக்கவும், கடவுள் என்னைச் சுற்றி இருக்கிறார் என்பதை உணரவும் எனக்கு உதவியது. உண்ணாவிரதத்தைத் மேற்கொண்டு தொடர நேர்மறை ஆற்றல்கள் எனக்கு உதவுகின்றன" என்று கூறினார்.

பாடகி மற்றும் மாடல் அழகியான இவர், செப்டம்பர் 2013 இல், உலகின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் 81 வது இடம்பிடித்தார்.

ஜூன் 2016 இல், ஆன்மீகத்தைத் தழுவி கன்னியாஸ்திரியாக மாறியதாக சோபியா அறிவித்தார். மேலும், அவர் தன் பெயரை 'கயா சோபியா மதர்(கன்னியாஸ்திரி)' என்று மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்