பிக்பாஸ் அமீர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்
|இயக்குனர் தினேஷ் இயக்கத்தில் அமீர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சென்னை,
பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அமீர். இவர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தினை இயக்குனர் முத்தையா அவர்களின் உதவியாளரான தினேஷ் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார் மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஸ்டைஸ் பிலிம் மேக்கர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் அமீருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கி உள்ளன.