< Back
சினிமா செய்திகள்
கதாநாயகிகளால் சினிமா துறையில் பெரிய மாற்றம் - நடிகை மதுபாலா
சினிமா செய்திகள்

கதாநாயகிகளால் சினிமா துறையில் பெரிய மாற்றம் - நடிகை மதுபாலா

தினத்தந்தி
|
15 April 2023 9:16 AM IST

தமிழில் அழகன், ரோஜா, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள மதுபாலா இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மதுபாலா அளித்துள்ள பேட்டியில், "நான் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஆண், பெண் வித்தியாசம் நிறைய இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, அலியா பட் போன்ற பல கதாநாயகிகள் சினிமா துறையை முழுவதுமாக பெரிய அளவில் மாற்றி விட்டார்கள்.

சினிமாவில் இப்போது கதாநாயகன், கதாநாயகியை சமமாக பார்க்கும் நிலை இருக்கிறது. நான் கதாநாயகியாக நடித்த காலத்தில் சில அற்புதமான படங்களில் நடித்தேன். நல்ல பாடல்கள் அமைந்தன. நடனம் ஆடினேன். காதல் காட்சிகளில் நடித்தேன். பல மொழிகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தேன். என் மீது எந்தவித புகார்களும் இல்லை. ஒரு கட்டத்தில் எனக்கு பிடித்தமான கதாபாத்திரங்கள் வராததால் திருமணம் செய்து கொண்டு சினிமா துறையை விட்டு விலக முடிவு செய்தேன்.

இந்தியில் ஆக்சன் ஹீரோக்கள் என்ற பெயர் பெற்ற அக்ஷய்குமார், சுனில் ஷெட்டி, அஜய் தேவ்கன் போன்றவர்களோடு நடித்து இருக்கிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்