தமிழ் படத்தில் மீண்டும் பூமிகா
|ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க பூமிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தமிழில் 2001-ல் வெளியான பத்ரி படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் பூமிகா. சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். ரோஜா கூட்டம் உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
2007-ல் பரத் தாகூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு பூமிகாவுக்கு கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கு படங்களில் அவ்வப்போது குணசித்திர வேடங்களிலும், சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் பூமிகா நடிக்கிறார். ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க பூமிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த படத்தில் ஜெயம் ரவியின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இது ஜெயம் ரவிக்கு 30-வது படம். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.