< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பாரதிராஜாவின் 'மண்வாசனை' படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு - வைரமுத்து டுவீட்
|16 Sept 2023 9:51 AM IST
பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
சென்னை,
பாரதிராஜாவின் 'மண்வாசனை' படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
இன்றுடன் நாற்பது ஆண்டுகள் பாரதிராஜாவின் மண்வாசனை வெளிவந்து.
"ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்"என்ற வரியின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது.
"என் வெட்கத்தின் சிவப்பு நிறம் பார்த்து அது ஆசையின் அழைப்பென்று கருதி என் முரட்டு மாமன் திருட்டுவேலை செய்துவிடக்கூடாது அதனால் மஞ்சள் பூசி என் வெட்கத்தை மறைக்கிறேன்" என்பது விளக்கம்.
இந்த நாற்பது ஆண்டுகளில் காதலின் விழுமியம் மாறியிருக்கிறது வெட்கப்பட ஆளுமில்லை, மஞ்சளுக்கும் வேலையில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.