< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சீனு ராமசாமியை கட்டிப்பிடித்து கண்கலங்கிய பாரதிராஜா
|1 July 2022 4:51 PM IST
'மாமனிதன்' திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி, எனது மகன் என பாரதிராஜா கூற, சீனு ராமசாமி கண் கலங்கி அழுதுவிட்டார்.
விஜய் சேதுபதி நடித்து, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த 'மாமனிதன்' படம், அனைத்து தரப்பினரின் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்தை பாரதிராஜாவுக்கு திரையிட்டு காண்பித்தார், சீனு ராமசாமி.
படம் முடிந்து வெளியே வந்த பாரதி ராஜா, சீனு ராமசாமியை முதுகில் தட்டிக் கொடுத்தார். "இந்தப் படத்தை இங்கே உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல் உலக தமிழர்கள் அனைவரும் தூக்கிவைத்து கொண்டாட வேண்டும்" என்றார். பின்னர், "எனக்கே உன்னைப் பார்க்க பொறாமையா இருக்குய்யா" என்று பாரதிராஜா கூற, சீனு ராமசாமி கண் கலங்கி அழுதுவிட்டார்.