பாரதிதாசனை தி.மு.க குறியீடாக சுருக்கிவிட்டனர் - வைரமுத்து
|பாரதிதாசன் குறித்த நினைவுகளை கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசனின் 134-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசனின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனிடையே பாரதிதாசன் குறித்த நினைவுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
"பாரதியாரை
தேசியத்தின் குறியீடாகவும்
பாரதிதாசனை
திராவிடத்தின் குறியீடாகவும்
ஆதியில்
அடையாளப்படுத்தியவர்கள்,
காலப்போக்கில்
பாரதியாரை
காங்கிரஸ் குறியீடாகாவும்
பாரதிதாசனை
தி.மு.க குறியீடாகவும்
சுருக்கிவிட்டனர்
காங்கிரசும் தி.மு.கவும்
கூட்டணி கொண்டாடும்
இந்தக் காலகட்டத்திலாவது
இருபெருங் கவிஞர்களையும்
மீண்டும்
தேசிய திராவிடக் குறியீடுகளாக
மேம்படுத்த வேண்டுகிறேன்
இருவரும்
கட்சி கடந்தவர்கள்;
தத்துவங்களுக்குச்
சொந்தமானவர்கள்
பாவேந்தர் பிறந்தநாளில்
இந்த இலக்கியக் கோணல்
நிமிர்ந்து நேராகட்டும்" என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.