< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பரத், வாணி போஜன் நடிக்கும் 'மிரள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
|20 Oct 2022 2:36 PM IST
பரத், வாணி போஜன் நடித்துள்ள 'மிரள்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் .
ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார். ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'மிரள்' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.