பரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு..!
|பரத், வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து டார்க் திரில்லர் வகை கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காற்றாலை பண்ணையின் பின்னணியில் ஒரு எளிய குடும்பத்தை சுற்றி நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பரத் என்ஜீனியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் மனைவியாக வாணி போஜன் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில், மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு 'மிரல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்த திரைப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. பிரசாத் எஸ்.என் இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.