< Back
சினிமா செய்திகள்
பரத் நடித்துள்ள மிரள் படத்தின் புதிய அப்டேட் - வைரலாகும் போஸ்டர்
சினிமா செய்திகள்

பரத் நடித்துள்ள 'மிரள்' படத்தின் புதிய அப்டேட் - வைரலாகும் போஸ்டர்

தினத்தந்தி
|
22 July 2022 3:54 AM IST

நடிகர் பரத் நடித்துள்ள 'மிரள்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் எம் சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மிரள்'. இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆக்செஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைத்துள்ளார். டார்க் திரில்லராக உருவாகியுள்ள 'மிரள்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

காற்றாலை பண்ணையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பரத் என்ஜினீயராக நடித்துள்ளார். வாணி போஜன் அவரது மனைவியாக நடித்துள்ளார். தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'மிரள்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்