பரத், ரம்யா நம்பீசன் நடிக்கும் வெப் தொடர்
|நடிகர் பரத், நடிகைகள் ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ஏற்கனவே வெப் தொடரில் நடித்துள்ளனர்.
சென்னை,
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
நடிகர் பரத், நடிகைகள் ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ஏற்கனவே வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் 'தலைமைச் செயலகம்' என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார்கள். கிஷோர், ஆதித்யா மேனன் கவிதா பாரதி, தர்ஷா குப்தா, சந்தான பாரதி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடரை தேசிய விருது பெற்ற பட இயக்குனர் வசந்தபாலன் டைரக்டு செய்துள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். அரசியல் கதையம்சத்தில் உருவாகி உள்ளது.
நிகழ்ச்சியில் ராதிகா பேசும்போது, 'தலைமை செயலகம்' வெப் தொடரை உருவாக்கிய பயணம் போராட்டமாகவே இருந்தது. எனது கணவர் சரத்குமார் உதவி இல்லாமல் இதை செய்து இருக்க முடியாது. அவர் எனக்கு தைரியம் கொடுத்தார். தொடர் சிறப்பாக வந்துள்ளது. தடைகளை தாண்டி பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்'' என்றார்.