< Back
சினிமா செய்திகள்
சிறந்த டைரக்டர் விருது பெற்ற மாதவன்
சினிமா செய்திகள்

சிறந்த டைரக்டர் விருது பெற்ற மாதவன்

தினத்தந்தி
|
30 May 2023 8:32 AM IST

சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் மாதவன் சிறந்த டைரக்டருக்கான விருதை பெற்றார். அவர் டைரக்டு செய்து நடித்த ராக்கெட்டரி படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கி இருந்தார்.

உளவு பார்த்ததாக போலி குற்றச்சாட்டில் சிக்கி சிறை தண்டனை மற்றும் சித்ரவதையை அனுபவித்த நேர்மையான விஞ்ஞானியின் வாழ்க்கை சம்பவங்களை இந்த படத்தில் மாதவன் பதிவு செய்து இருந்தார். இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். படத்தை மாதவனே தயாரித்தும் இருந்தார்.

தற்போது ராக்கெட்டரி படத்துக்காக சிறந்த டைரக்டர் விருது பெற்றுள்ள நிலையில் மாதவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்து ஜி.டி.நாயுடு வாழ்க்கை கதையிலும் மாதவன் நடிக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்