டோவினோ தாமசுக்கு சிறந்த ஆசிய நடிகர் விருது
|2018 படத்தில் நடித்தற்காக டோவினோ தாமசுக்கு செப்டிமியஸ் விருது விழாவில் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுசின் மாரி 2 படத்தில் நடித்து இருந்தார். சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் வந்த மின்னல் முரளி தமிழ், மலையாள மொழிகளில் வெளியானது.
டோவினோ தாமஸ் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான 2018:எவேரிஒன் இஸ் அ ஹீரோ என்ற படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில் 2018 படத்தில் நடித்தற்காக டோவினோ தாமசுக்கு செப்டிமியஸ் விருது விழாவில் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது. விருது பெற்றதற்காக டோவினோ தாமஸ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
இந்த படம் கேரளாவில் 2018-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடிப்படையாக வைத்து படமாகி இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் டைரக்டு செய்து இருந்தார். ஆசிப் அலி, குஞ்சாகா போபன், வினித் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.