கேரள இயக்குனர் மீது வங்காள நடிகை பரபரப்பு புகார்
|நடிகை ஸ்ரீலேகா மித்ரா கேரள இயக்குனர் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரபல வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா. இவர் வங்க மொழியில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஸ்ரீலேகா மித்ரா கேரள இயக்குனர் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் பலேரி மாணிக்யம். இப்படத்தின் ஆடிஷனில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா கலந்துகொண்டதாகவும், அப்போது கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் படம் பற்றி பேசி கொண்டிருக்கையில் ரஞ்சித் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் கூறினார். பின்னர் பயந்துபோய் அந்த இடத்தை விட்டு சென்று படத்தில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததாகவும் கூறினார்.
பாலியல் வன்கொடுமை எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தும் அவர் அதே வேளையில், ரஞ்சித்தின் நடத்தையை பார்க்கையில் அத்தகைய எண்ணம் இருந்திருக்கலாம் என்ற உணர்வை தனக்கு ஏற்படுத்தியது என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர், 'இந்த விஷயத்தில் தான்தான் பாதிக்கப்பட்டவன் என்றும், நடிகை ஸ்ரீலேகா இதை சட்டப்பூர்வமாக தொடரும் பட்சத்தில், தானும் அதை அப்படியே எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.