< Back
சினிமா செய்திகள்
கர்ப்பமாக இருப்பது ஆசிர்வாதம் - நடிகை இலியானா
சினிமா செய்திகள்

கர்ப்பமாக இருப்பது ஆசிர்வாதம் - நடிகை இலியானா

தினத்தந்தி
|
11 Jun 2023 6:28 AM IST

தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள இலியானா, தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குழந்தைக்கு தந்தை யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

கர்ப்பிணியான இலியானாவுக்கு வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து வயிறு பெரிதாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் தற்போது அடையாளம் காணமுடியாத வகையில் காதலனுடன் இருக்கும் மங்கலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானா பகிர்ந்துள்ளார்.

அதில் இலியானா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், "கர்ப்பமாக இருப்பது ஆசீர்வாதம். இதை அனுபவிக்கும் நான் அதிர்ஷ்டசாலி. ஒரு குழந்தை தனக்குள் வளர்வது விளக்க முடியாத உணர்வு. அதிக நாட்கள் எனது வயிற்றை பார்த்தபடி உற்சாகம் கொள்கிறேன். குழந்தையை விரைவில் சந்திப்பேன். சில தினங்கள் இது கடினமான உணர்வாகவும் இருக்கிறது. சாதாரண விஷயங்களுக்கு அழக்கூடாது. தைரியமாக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்