'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா பகிர்ந்த அழகு ரகசியம்
|பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலா தனது அழகு ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சோபிதா துலிபாலா. இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். அழகு போட்டிகளில் பங்கேற்றும் விருது பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் தனது அழகு ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சோபிதா துலிபாலா அளித்துள்ள பேட்டியில், ''எனது அம்மா சொன்ன அழகுகுறிப்புகளை பின்பற்றுவதால்தான் எனது முகம் இந்த அளவுக்கு பளபளப்பாக இருக்கிறது. கடலை மாவினால் அடிக்கடி 'பேஸ் பேக்' போட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து புரூட் பல்சுடன் 'மசாஜ்' செய்து கொள்கிறேன். அதுபோல் பச்சை பாலை கிளன்சிங்காக உபயோகிக்கிறேன். தூய்மையான தேங்காய் எண்ணெய்யை உதடுகளுக்கு பூசிக்கொள்கிறேன். விளக்கு எண்ணெய்யை புருவங்களுக்கு பிரஷ் செய்கிறேன். இவைதான் எனது அழகின் ரகசியம்''என்றார்.
சமந்தாவை விவாகரத்து செய்த நடிகர் நாக சைதன்யாவை சோபிதா துலிபாலா காதலித்து வருவதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.