நடிகை தமன்னா பகிர்ந்த அழகு ரகசியம்....!
|தனது இளமை ரகசியம் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலய்யா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகியும் இன்னும் இளமையாகவே இருப்பதாக ரசிகர்கள் வியக்கிறார்கள்.
இந்த நிலையில் தனது இளமை ரகசியம் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "கிளாமர் உலகில் பிட்னஸுடன் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ உணவு பழக்கங்களும் அவ்வளவு முக்கியம்.
காலை சிற்றுண்டியாக நட்ஸ், பேரிச்சம்பழம், செர்ரீஸ், வாழைப்பழத்தை சமபங்காக எடுத்துக்கொண்டு சாப்பிடுவேன். மதிய உணவில் பிரவுன் ரைஸ், பருப்பு, காய்கறிகள் இருக்கும். தினமும் மாலை 5:30 மணிக்கு எல்லாம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை 6 மணி வரை எதுவுமே சாப்பிட மாட்டேன். தினமும் இப்படி 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறேன். இதனால் சருமம் அழகாக பளிச்சென்று இருக்கும். கிரீன் டீ, ஆம்லா ஜூஸ் போன்றவையும் எனது ஆரோக்கிய ரகசியத்தில் ஒரு பங்காக இருக்கிறது'' என்றார்.