நடிகைகள் குறித்து ஆபாச கருத்து 'ஆமா நாறடிப்பேன்; நீங்க யோக்கியமா' பயில்வான்-ஷகிலா மோதல்!
|பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூப் மூலம் விமர்சனம் செய்து வருகிறார்.
சென்னை
பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பயில்வான் ரங்கநாதன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ளார்.
பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூப் மூலம் விமர்சனம் செய்து வருகிறார்.
இணையதளம் ஒன்றில், நடிகை ஷகிலா பயில்வான் ரங்கநாதனை பேட்டி எடுத்தார். இதில்,ஷகிலா கேட்ட பல கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பயில்வான் ரங்கநாதன் திக்குமுக்காடி போனார். இதில், அனைத்து நடிகைகள் பற்றி காசிப் பேசுகிறீர்கள், இப்போது என்னை பற்றி ஒரு கிசுகிசு சொல்லுங்க என்று தடால் அடியாக கேட்டார் ஷகிலா. இதற்கு, பயில்வான், இது காசிப் இல்லை நீங்கள் திருநங்கைகளுக்கு பல உதவி செய்து வருகிறீர்கள் என்று நான் கேள்விபட்டேன் என்றார்.
ஷகிலா: நீங்க பேசுறதை மக்கள் பாக்குறாங்க. அதனால் தான் நீங்க பேசுறீங்க. ஹீரோயின்ஸ் கிளாமரா ஆடை அணிவதையும் மக்கள் பார்க்குறாங்க, அதை பத்தி நீங்க ஏன் தப்பா பேசுறீங்க?
பயில்வான்: நான் தப்பா பேசவில்லை. ராஷ்மிகா மந்தனா முக்கால் உடல் தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து விழாவில் பங்கேற்கிறார். அதை தான் பேசுறேன்.
ஷகிலா: அவங்க கிளாமரா தான் விழாவிற்கு வருகிறார். அதை ஏன் நீங்க சொல்லனும்?
பயில்வான்: அவங்க சொல்லனும்னு விரும்புறாங்க.
ஷகிலா: இது தான் எனக்கு புரியல, அவங்க அதை விரும்புறாங்கனு உங்களுக்கு யாரு சொன்னா?
பயில்வான்: ஆமாம், பத்திரிக்கைகாரங்களிடம் சொல்றாங்க, 'நான் எப்படி ட்ரஸ் பண்ணா உங்களுக்கு என்ன?' என்று.
ஷகிலா: பொதுவெளியில் பிரபலமாக இருப்பது ஒரு குத்தமா? நீங்களும் தான் பிரபலமா இருக்கீங்க!
பயில்வான்: குற்றம் என்று சொல்லவில்லை. பிரபலமாக இருப்பவர்கள் நீங்கள் நினைப்பது மாதிரி இல்லை. அவர்களின் உண்மை முகம் இது தான் என்பதை தான் நான் சொல்றேன்.
ஷகிலா: 15 வருசத்திற்கு முன் ஒரு ஹீரோ, ஹீரோயின் காதலித்திருக்கலாம். இன்று நீங்கள் அவர்களை பேசுவதால், அவர்களின் குடும்பம் பாதிக்கப்படாதா?
பயில்வான்: காதலிப்பதும், காதல் முறிவு ஏற்படுவதும், இன்னொருவரை திருமணம் செய்வதும் இயற்கை!
ஷகிலா: இயற்கை தான், நீங்கள் அப்படி பேசும் போது, அந்த நடிகையின் மகள், 'என்ன மம்மி நீங்க இப்படி பண்ணீங்களா?' என்று கேட்கமாட்டாளா?
பயில்வான்: பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால், இதெல்லாம் இயல்பானது தான்.
ஷகிலா: கஸ்தூரியை ஏன் அழகான ஆண் என்று கூறினீர்கள்?
பயில்வான்: நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே! இந்த மாதிரி வார்த்தைகளே என்னிடமிருந்து வராது.
ஷகிலா: ஆணழகி என்று சொல்லியிருக்கிறீங்க
பயில்வான்: இல்லையே, நான் ஆணழகி என்று சொல்லவே இல்லையே! அந்த மாதிரி உடல் ரீதியா நான் யாரையும் துன்புறுத்த மாட்டேன்.
ஷகிலா: நீங்க ஆதாரம், ஆதாரம்னு சொல்றீங்க, எங்களிடமும் இருக்கிறது ஆதாரம். 'சென்னை ஆணழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கஸ்தூரி' என்று பயில்வான் பேசிய ஆடியோவை பிளே செய்கிறார் ஷகிலா
பயில்வான்: ஓ… இது வா, சென்னை அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் என்பதை தான் தவறுதலாக ஆணழகி என்று கூறிவிட்டேன். 'டங் ஸ்லிப்' தான் அது. யாரையும் உள்நோக்கத்தோடு பேசல.
ஷகிலா: நீங்கள் உள்நோக்கம் இல்லாமல் தான் பேசுவீங்க, வீடியோ போட்டவங்க அதை சரிபார்த்திருக்கனும், கட் பண்ணிருக்கனும்.
பயில்வான்: பண்ணிருக்கலாம், அதற்கு வாய்ப்பு இருக்கு. தவறா பேசுவதை எடிட் பண்ண வேண்டியது எடிட்டரோட கடமை. அது தப்பு கிடையாது, தவறு.
இதில் தனது காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த பயில்வான் ரங்கநாதன், மூன்று நடிகைகள் என்னை ஒருதலையாக காதலித்தார்கள். என்னை திருமணம் செய்து கொள்ள நினைத்தார்கள். ஆனால், என் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு காரணம் எங்கள் குடும்பம் ஆச்சாரமான குடும்பம் என்பதால், என் 32வது வயதில் பெற்றோர் பார்த்துவைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்றார். நான் மட்டும் நடிகையை திருமணம் செய்திருந்தால் என் பெற்றோரை இழந்து இருப்பேன், சமூதாயத்தில் எனக்கு சரியான அங்கிகாரம் கிடைத்து இருக்காது. இன்று எனக்கு சமூதாயத்தில் மரியாதை இருக்கு என்றார்.
தொடர்ந்து அதிரடியாக கேள்விகளை ஷகிலா கேட்டதால், கடுப்பாகிப் போன பயில்வான் ரங்கநாதன், உங்களை ஏன் மலையாளப்படத்தில் நடிக்கவே கூடாது என்று அனைத்து நடிகர்களும் போர்க்கொடி தூக்கி ஒதுக்கி வைத்தார்கள் என்று கேட்டார். என்னை யாரும் மலையாளப்படத்தில் இருந்து ஓடவிடவில்லை இதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன் , உங்களால் ஆதாரம் தரமுடியுமா எதுவுமே தெரியாமல் பத்திரிக்கைகளை பார்த்து அரைகுறையா பேசாதீங்க என்று சரியான பதிலடி கொடுத்தார்.