< Back
சினிமா செய்திகள்
தேனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது பவதாரிணி உடல்
சினிமா செய்திகள்

தேனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது பவதாரிணி உடல்

தினத்தந்தி
|
26 Jan 2024 10:32 PM IST

இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

சென்னை,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலிக்காக பவதாரிணி உடல் வைக்கப்பட்டது.

பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சுதா கொங்கரா, நடிகர் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வருகை தந்தனர். மேலும், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் குவிந்தனர்.

இதனை தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. தேனி லோயர்கேம்பில் உள்ள இளையராஜா தோட்ட வளாகத்தில் தயார் மற்றும் பாட்டி சமாதிகளுக்கு அருகே பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்