'பேட்மேன் பார்ட் 2' படப்பிடிப்பு - அப்டேட் கொடுத்த மேட்சன் டாம்லின்
|'பேட்மேன் பார்ட் 2' படத்தின் படப்பிடிப்பு குறித்து எழுத்தாளர் மேட்சன் டாம்லின் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை,
கடந்த 2022-ம் ஆண்டு மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஹாலிவுட் படம் "தி பேட்மேன்". இப்படத்தில், ராபர்ட் பாட்டின்சன் பேட் மேனாக நடித்திருந்தார். மேலும், ஜோ கிராவிட்ஸ், கொலின் பாரெல் மற்றும் ஜெப்ரி ரைட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இப்படம் வெளியாகி சுமார் 750 மில்லியன் டாலர் வசூலித்தது. இதனையடுத்து, இப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்நிலையில், 'பேட்மேன் பார்ட் 2' படத்தின் படப்பிடிப்பு குறித்து எழுத்தாளர் மேட்சன் டாம்லின் அப்டேட் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், 'அடுத்த வருடம் 'பேட்மேன் பார்ட் 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இது உருவாக இருக்கிறது. அதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். இன்னும் தாமதப்படுத்த முடியாது. இத்திரைப்படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்,' என்றார். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.