'லியோ' படத்தை இணையதளங்களில் வெளியிட தடை ...!
|லியோ படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை நாளை முதல் 24-ந்தேதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் லியோ படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்குமாறு படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 'லியோ' திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும். இதனால் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி, அதில் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் லியோ படத்தை 1246 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.