< Back
சினிமா செய்திகள்
இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
சினிமா செய்திகள்

இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள 'பகாசூரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

தினத்தந்தி
|
26 Aug 2022 8:57 PM IST

இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள 'பகாசூரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரவுபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 'பகாசூரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் இந்த படத்தின் டீசர் வருகிற 28-ம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 'பகாசூரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்