நடிகை அஞ்சலி நடிக்கும் வெப் தொடர்
|நடிகை அஞ்சலி நடிக்கும் 'பஹிஷ்கரனா' தெலுங்கு வெப் தொடரின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை அஞ்சலி 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். அவர் முக்கிய வேடத்தில் நடிக்க பரபரப்பான தெலுங்கு வெப் சீரிஸ் 'பஹிஷ்கரனா' தயாராகிறது. இந்த வெப் தொடரை முகேஷ் பிரஜாபதி இயக்குகிறார். கிராமத்து பழிவாங்கும் கதையாக உருவாகும் இந்தத் தொடரில் மொத்தம் 6 அத்தியாயங்கள் இருக்கும். அஞ்சலியின் பிறந்தநாளையொட்டி ''பஹிஷ்கரனா' படத்தின் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.
மோஷன் போஸ்டரைப் பார்த்தால்.. அஞ்சலி கையில் வேட்டைக் கத்தியை பிடித்தபடி கோபமாக அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் இருந்த மர நாற்காலி தீப்பற்றி எரிகிறது. 'பஹிஷ்கரனா' என்ற வெப் சீரிஸில் மீண்டும் மற்றொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தீவிரமான கேரக்டரில் அஞ்சலி கவருவார் என்று தெரிகிறது. இந்த தொடரில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ரவீந்திர விஜய், ஸ்ரீதேஜ், அனன்யா நாகெல்லா, சண்முக், சைதன்யா சாகிராஜு, முகமது பாஷா, பேபி சைத்ரா ஆகியோர் மற்ற வேடங்களில் நடிக்கின்றனர்.
பிக்சல் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் பிரசாந்தி மலிஷெட்டி தயாரித்துள்ள 'பஹிஷ்கரனா' தொடர் விரைவில் ZEE 5 இல் பார்வையாளர்களை சென்றடையவுள்ளது.