7 ஹீரோயின்கள் "கண்டென்ட்ல மேட்டர் இல்ல. மேட்டர் தான் கண்டென்டே" பஹீரா பட டுவிட்டர் விமர்சனம்
|பஹீரா படம் டீசண்டாக இருக்கிறது. பிரபுதேவாவின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. இதர நடிகர் நடிகைகள் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்
சென்னை
ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லேனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் போன்ற திரைப்படங்களை இயக்கிவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் பஹீரா.
சைக்கோ திரில்லர் படமான இதில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஜனனி, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி என மொத்தம் 7 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று தான் ரிலீசாகி உள்ளது.
அந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பஹீரா படம் டீசண்டாக இருக்கிறது. பிரபுதேவாவின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. இதர நடிகர் நடிகைகள் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையும், திரைக்கதையும் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. இளைஞர்களை இப்படம் கவரும்" என குறிப்பிட்டுள்ளார்.