< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகும் 'பேட் நியூஸ்' படத்தின் 2-வது பாடல்
|10 July 2024 6:40 PM IST
திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடித்துள்ள 'பேட் நியூஸ்' படத்தின் 2-வது பாடல் வெளியானது.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப்பின் கணவர் ஆவார். நடிகர் விக்கி கவுசல் தற்போது 'பேட் நியூஸ்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை, பிரபல இயக்குனர் ஆனந்த் திவாரி இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக விக்கி கவுசல் நடித்திருந்த 'லவ் பேர் ஸ்கொயர் பீட்' படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். பேட் நியூஸ் படத்தில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடலான 'தௌபா தௌபா' வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாடலான 'ஜானம்' வெளியாகி உள்ளது. இதனைபார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இப்பாடலை வைரலாக்கி வருகின்றனர். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.