< Back
சினிமா செய்திகள்
துருவ நட்சத்திரம் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்பு பணிகள் தீவிரம் - ஹாரிஸ் ஜெயராஜ் ட்வீட்
சினிமா செய்திகள்

'துருவ நட்சத்திரம்' படத்தின் பின்னனி இசைக்கோர்ப்பு பணிகள் தீவிரம் - ஹாரிஸ் ஜெயராஜ் ட்வீட்

தினத்தந்தி
|
25 Feb 2023 6:09 PM IST

'துருவ நட்சத்திரம்' படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருகிறார்.

சென்னை,

கவுதம் மேனன் இயத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருகிறார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Started the Background score for @menongautham 's film #Dhruvanatchathiram. in Dolby 9.1.4 See you soon in theatres.

— Harris Jayaraj (@Jharrisjayaraj) February 25, 2023 ">Also Read:

மேலும் செய்திகள்