< Back
சினிமா செய்திகள்
என் பேபி, என் முயல்குட்டி... நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்  ஜாக்குலினுக்கு சுகேஷ் உருகி உருகி கடிதம்
சினிமா செய்திகள்

'என் பேபி, என் முயல்குட்டி... நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் ஜாக்குலினுக்கு சுகேஷ் உருகி உருகி கடிதம்

தினத்தந்தி
|
10 April 2023 11:49 AM IST

'என் பேபி, என் முயல்குட்டி... நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் - ஜாக்குலினுக்கு சுகேஷ் நுருகி உருகி வாழ்த்து கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஈஸ்டரை முன்னிட்டி இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், ``மை பேபி, என் முயல் குட்டி... அடுத்த ஈஸ்டரை இதற்கு முன்பு கொண்டாடிய ஈஸ்டர்களில் மிகவும் சிறந்ததாக மாற்றுவேன். உங்களுக்கு மிகவும் பிடித்த விழாவில் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்.

இந்த வருடத்தில் இது உங்களுக்கு மிகவும் பிடித்தமான திருவிழா. இதில் உங்களுடன் இல்லாமல் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். நீங்கள் ஈஸ்டருக்கு முட்டையை உடைப்பதை பார்க்காமல் மிஸ் செய்கிறேன்.

என் பேபி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா... இந்தப் பூமியில் உன்னைப்போல் யாரும் அழகாக இல்லை. மை பேபி, என் முயல் குட்டி உன்னைக் காதலிக்கிறேன். நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத்தெரியும்" என்று குறிப்பிட்டிருக்கிறார் சுகேஷ். இந்தக் கடிதத்தை சுகேஷின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் வெளியிட்டிருக்கிறார்.

இதற்கு முன்னும் தனது பிறந்தநாள் அன்று சுகேஷ் உருகி உருகி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவரை வெளியிட்டிருக்கும் கடிதங்களுக்கு ஜாக்குலின் எந்தவித பதிலும் தெரிவித்ததில்லை.

தொழில் அதிபர்களை ஏமாற்றி பல கோடி பண மோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. முத்தம் கொடுத்த புகைப்படங்களும் வெளியானது. ஜாக்குலினிடம் அவரை கதாநாயகியாக வைத்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க இருப்பதாக சுகேஷ் உறுதி அளித்த தகவலும் அம்பலமானது. சுகேஷ் சந்திரசேகரை 2 முறை சந்தித்தேன். அவரால் எனது வாழ்க்கை நரகமாகிவிட்டது என்று ஜாக்குலின் தெரிவித்து இருந்தார்.


மேலும் செய்திகள்