< Back
சினிமா செய்திகள்
24 வயது பெண்ணுடன் பப்லு 2-வது திருமணம்?
சினிமா செய்திகள்

24 வயது பெண்ணுடன் பப்லு 2-வது திருமணம்?

தினத்தந்தி
|
24 Oct 2022 4:29 PM IST

2-வது திருமணம் குறித்து பப்லு விளக்கமளித்துள்ளார்.

தமிழில் வானமே எல்லை, பாண்டி நாட்டு தங்கம், சிகரம், அவள் வருவாளா, அழகன், வீரமணி, வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்துள்ள பப்லு என்ற பிரித்விராஜ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 25 வயதில் மகன் இருக்கிறார். பப்லுவுக்கு தற்போது 56 வயது ஆகிறது. இந்த நிலையில் மனைவியை பப்லு பிரிந்து விட்டதாகவும் மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இந்த வயதில் திருமணமா? என்று சிலர் அவரை விமர்சிக்கவும் செய்தனர்.

இதற்கு விளக்கம் அளித்த பப்லு கூறும்போது ''எனக்கு 2-வது திருமணம் இன்னும் நடக்கவில்லை. எல்லோருக்கும் தெரிவித்தே மீண்டும் திருமணம் செய்து கொள்வேன். என்னை காதலிக்கும் பெண்ணுக்கு 23 வயது இல்லை. 24 வயது ஆகிறது. மலேசியா பெண் இல்லை. ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு பெண். அவர் குடும்பத்தினருக்கு இது தெரியும். ஏற்றுக்கொண்டனர். ஆனால் எனக்கு முடிவு எடுக்க கொஞ்சம் நேரம் வேண்டும். அந்த பெண்ணுக்கு 24 வயதும் எனக்கு 56 வயதும் ஆவதால் யோசிக்க கொஞ்சம் நேரம் கொடுத்துள்ளேன். ஆனால் அந்த பெண் உறுதியாக இருக்கிறார்'' என்றார்.

மேலும் செய்திகள்