'எல்லா பெருமையும் அவரைதான் சேரும் ' - பாகுபலி பாத்திரத்திற்கு குரல் கொடுத்த ஷரத் கேல்கர்
|என்னை குரல் கொடுக்க அழைத்த ராஜமவுலி சாருக்குதான் எல்லா பெருமையும் சேரும் என்று ஷரத் கேல்கர் கூறினார்.
மும்பை,
பாகுபலி படத்தின் முன் கதை, அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக உருவாகி உள்ளது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் கடந்த 17-ம் தேதி டிஸ்னி-ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த சீரிஸில் பாகுபலி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த ஷரத் கேல்கர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அபோது அவர் பேசியதாவது, 'டப்பிங் பணியை சிறப்பாக செய்கிறேன். இதனால் ஒரு நல்ல குரல் தேவைப்படுகின்ற கதாபாத்திரத்திற்கு மட்டுமே அதனை நான் செய்வேன் என்று அர்த்தமில்லை. முதலில் நான் ஒரு நடிகர். நான் சிறப்பாக நடிக்கக்கூடியவன். எனது குரலைப் பொறுத்தவரை எந்தவொரு பரிமாணத்திற்கும், அதனை என்னால் எடுத்துச்செல்ல முடியும்.
அதிஷ்டவசமாக கடந்த இரண்டு வருடங்களில் ஏராளமானோர் என் மீது அதிக நம்பிக்கை வைத்தனர். இதனால், வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும், பின்னணி குரல் கொடுக்கவும் நான் முயற்சி செய்கிறேன்'. என்று கூறினார்.
மேலும் பாகுபலி குறித்து கூறுகையில், 'என்னை இந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க அழைத்த ராஜமவுலி சாருக்குதான் எல்லா பெருமையும் சேரும். எனக்கு அவர் முழு சுதந்திரம் கொடுத்தார். முதல் பாகத்தில் குரல் கொடுத்தபோது மாலையில் வந்து எல்லா பணிகளையும் பார்ப்பார். ஆனால், இரண்டாவது பாகத்தின்போது எங்களை முழுமையாக நம்பி அவர் வராமல் நல்லா பண்ணுங்கள் என்று கூறினார்'. என்றார்