< Back
சினிமா செய்திகள்
பாகுபலி 3-ம் பாகம் வருமா?
சினிமா செய்திகள்

பாகுபலி 3-ம் பாகம் வருமா?

தினத்தந்தி
|
11 Oct 2022 7:22 AM IST

பாகுபலி 3-ம் பாகம் பற்றிய அறிவிப்பு வரும் என்று டைரக்டர் ராஜமவுலி சூசகமாக தெரிவித்து உள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி படம் உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. பாகுபலி இரண்டு பாகங்களும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஈட்டின. பாகுபலி படத்தை ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியவில்லை. அதன் 3-ம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பாகுபலி-3 வருமா என்று பிரபாசிடம் கேள்வி எழுப்பியபோது, ''பாகுபலி 3-ம் பாகம் எடுப்பது எனது கையில் இல்லை. அது டைரக்டர் ராஜமவுலி கையில் இருக்கிறது. பாகுபலி எப்போதும் எனது இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும். அது ஏற்படுத்திய தாக்கம் ஈடுசெய்ய முடியாதது" என்றார். இந்த நிலையில் தற்போது பாகுபலி 3-ம் பாகம் பற்றிய அறிவிப்பு வரும் என்று டைரக்டர் ராஜமவுலி சூசகமாக தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது. ''பாகுபலி 2 படத்தின் கிளைமாக்சில் 3-ம் பாகத்துக்கான தொடர்பு இருக்கும். பாகுபலி 3 படத்தை உருவாக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கையில் உள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்