< Back
சினிமா செய்திகள்
ஐயப்பன் பக்தி படம்
சினிமா செய்திகள்

ஐயப்பன் பக்தி படம்

தினத்தந்தி
|
6 Jan 2023 10:11 AM IST

சபரிமலை ஐயப்பன் மகிமைகளை மையமாக வைத்து ‘மாளிகாபுரம்' என்ற படம் தயாராகி உள்ளது.

இதில் உன்னிமுகுந்தன், சம்பத்ராம், மனோஜ் கே.ஜெயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சபரிமலை செல்ல தந்தை மற்றும் சிறுமியான அவரது மகள் ஆகிய இருவரும் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் தந்தை சபரிமலை செல்ல முடியாத நிலைமை ஏற்படுகிறது. ஆனால் சிறுமி பிடிவாதமாக சபரிமலை புறப்படுகிறாள். வழியில் அவளுக்கு ஆபத்து சூழ்கிறது. அதையும் மீறி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்தாளா? என்பது கதை. இந்த படத்தை விஷ்ணு சசி சங்கர் டைரக்டு செய்துள்ளார். வி.பிரபாகர் வசனம் எழுதி உள்ளார். ஒளிப்பதிவு: விஷ்ணு நாராயணன், இசை: ரஞ்சன் ராய். இந்தப் படத்துக்கு டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், சங்கீதம் பாடு குயில் சிங்கார தோகை மயில் என்று தொடங்கும் பாடலை எழுதி உள்ளார். யார் கண்ணனும் பாடல் எழுதி உள்ளார். அபிலாஷ் பிள்ளை கதை திரைக்கதை எழுதி உள்ளார். வேல்முருகன், பிரசன்னா ஆகியோர் பாடி உள்ளனர்.

மேலும் செய்திகள்