< Back
சினிமா செய்திகள்
தொடர்ந்து வசூலில் முன்னேறும் அயலான்
சினிமா செய்திகள்

தொடர்ந்து வசூலில் முன்னேறும் அயலான்

தினத்தந்தி
|
25 Jan 2024 10:11 PM IST

'அயலான்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்தது.

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்