< Back
சினிமா செய்திகள்
அயலான் வெற்றிதான் இரண்டாம் பாகத்தை முடிவு செய்யும் -ரவிக்குமார்
சினிமா செய்திகள்

அயலான் வெற்றிதான் இரண்டாம் பாகத்தை முடிவு செய்யும் -ரவிக்குமார்

தினத்தந்தி
|
31 Dec 2023 11:10 PM IST

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், 'அயலான்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 'அயலான்' படத்தின் வெற்றியை பொருத்து தான் அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், அயலான் படத்தை காட்டிலும் அதனுடைய இரண்டாம் பாகம் எடுப்பதற்கு சுமார் 4 மடங்கு அதிகம் செலவாகும் என்றும் ஏற்கனவே சிவகார்த்திகேயனிடம் இரண்டாம் பாகத்திற்கான கதையை கூறி அவருக்கும் அது பிடித்துள்ளதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்