< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அயலான் பட டிரைலர் இன்று இரவு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு..!
|5 Jan 2024 6:13 PM IST
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'.
சென்னை,
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், 'அயலான்' படத்தின் டிரைலர் இன்று இரவு 8.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.