அடடே... ஆளே மாறிவிட்டாரே...
|பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சுவர்ணா தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘அடடே... இப்படி ஆளே மாறிவிட்டாரே’ என்றே யோசிக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்தவர், சுவர்ணா மாத்யூ. இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் 'சந்திரமுகி' படம் குறிப்பிடத்தக்க பெயரை பெற்றுத்தந்தது.
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் சுவர்ணா நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.
கேரளாவைச் சேர்ந்த இவர், 1992-ம் ஆண்டு மிஸ் கேரளா அழகி பட்டத்தை தட்டிச் சென்றவர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சுவர்ணா தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், 'அடடே... இப்படி ஆளே மாறிவிட்டாரே' என்றே யோசிக்கிறார்கள்.