< Back
சினிமா செய்திகள்
விபத்தில் சிக்கிய அவெஞ்சர் நடிகருக்கு 30 எலும்புகள் முறிந்தன
சினிமா செய்திகள்

விபத்தில் சிக்கிய 'அவெஞ்சர்' நடிகருக்கு 30 எலும்புகள் முறிந்தன

தினத்தந்தி
|
23 Jan 2023 1:41 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். படுத்த படுக்கையில் இருந்து சிகிச்சை பெறும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர் 'அவெஞ்சர்ஸ்' படம் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்தார். அமெரிக்காவில் நெவாடா மாகாணத்தில் உள்ள மவுண்ட் ரோஸ் - ஸ்கி தஹோ பகுதியில் வசித்து வருகிறார். புத்தாண்டு அன்று ஜெர்மி ரென்னர் காரில் சென்றபோது பனிப்புயலில் கார் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெர்மி ரென்னர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு மூக்கு வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் இருந்தாலும் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் ஜெர்மி ரென்னர் தற்போது படுத்த படுக்கையில் இருந்து சிகிச்சை பெறும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், "அதிகாலை உடற்பயிற்சி, புத்தாண்டு தீர்மானங்கள் எல்லாம் இந்த புது வருடத்தில் மாறிவிட்டன. விபத்து எனது குடும்பத்தினரை சோகத்தில் தள்ளியது. அதில் இருந்து மீள்கிறேன். நான் நலம்பெற வாழ்த்தி குறுந்தகவல் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.

விபத்தில் உடைந்து போன எனது 30-க்கும் மேற்பட்ட எலும்புகள் சரியாகி வலுவடையும். உங்கள் அனைவருக்கும் அன்பும், ஆசிகளும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்