< Back
சினிமா செய்திகள்
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 3  தொடர் வெளியீடு தாமதம்; கடைசி படம் 2031ல் வெளியாகும்
சினிமா செய்திகள்

ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார் 3 ' தொடர் வெளியீடு தாமதம்; கடைசி படம் 2031ல் வெளியாகும்

தினத்தந்தி
|
15 Jun 2023 10:48 AM IST

அவதார் 2' படத்தின் வெற்றியால் 'அவதார் 3' படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரிக்கிறார்.

வாஷிங்டன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது. அவதார் 2 ரூ.17,000 கோடி வசூலை குவித்ததாக கூறப்படுகிறது.

சினிமாவில் தன் கற்பனையால் பொறாமைப்பட வைத்தவர் ஒருவர் சக்சல் ஜேம்ஸ் கேமரூன்.மிகவும் புதுமையான சிந்தனைகளும் மேக்கிங் ஸ்டைலும் கேமரூனை வித்தியாசப்படுத்துகிறது.

டெர்மினேட்டர், ஆக்ஷன் படங்களில் புதுமை புகுத்தி, டைட்டானிக், அவதார் போன்ற ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் கேமரூனின் கற்பனைக்கு எடுத்துக்காட்டு.

அவதார் முதல் பாகத்தை பார்க்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள்.அதிக பாராட்டுகளை பெற்ற படத்திற்கு விமர்சனங்கள் உண்டு.உலகிலேயே அதிக வசூல் படமாக வர இந்த படத்தில் என்ன இருக்கிறது..?

ஆரம்பம் முதல் இறுதி வரை விஎப் எக்ஸ் காட்சியமைப்புகள் இருக்கிறது என கூறுவார்கள். ஜேம்ஸ் கேமரூன் டைரக்டராகவும், பொறியாளராகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உள்ளார்.

கேமரூன் அவதார் படத்தின் நான்கு பாகங்களை உருவாக்க உள்ளார். அவற்றில் இரண்டை முழுமையாக படமாக்கியுள்ளார். ("அவதார்:2 தி வே ஆப் வாட்டர்" மற்றும் "அவதார் 3" ) அவதார் 4 படத்தின் சில பகுதிகளும் படமாக்கப்பட்டுள்ளன. கேமரூனின் திட்டத்தின் படி "அவதார் 4" தயாரிப்பை முடித்து, "அவதார் 5" முழுவதுமாக படமாக்கப்படும்.

அவதார் வரிசையின் அடுத்த படத்தின் தலைப்பு அவதார் 3: தி சீட் பேரர் என்று கூறப்படுகிறது. இது மிகவும் தனித்துவமான தலைப்பு மற்றும் இதைப் பற்றி யாரும் யூகிக்க முடியாது. நான்காவது தி துல்கின் ரைடர் என்றும் ஐந்தாவது தி குவெஸ்ட் பார் எய்வா என்றும் கூறப்படுகிறது. 68 வயதான கேமரூன் தனது வாழ்நாள் முழுவதும் "அவதார்" திரைப்படங்களை மட்டுமே இயக்குவார் என்று கூறினால் மிகையாகாது.

அவதார் 2' படத்தின் வெற்றியால் 'அவதார் 3' படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரிக்கிறார். முன்னதாகவே இவற்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

'அவதார் 3' படத்தின் பெரும்பாலான காட்சிகளை இயக்குனர் படமாக்கிவிட்டார். வேறு ஏதாவது இருந்தால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதால், அதிக காலம் எடுக்கும். அதேபோல் 'அவதார் 4' மற்றும் 'அவதார் 5' படங்களுக்கான ஸ்கிரிப்ட் ஏற்கனவே தயாராகிவிட்டது.

வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள்

அவதார்: டிசம்பர் 18, 2009

அவதார் 2: டிசம்பர் 16, 2022

அவதார் 3: டிசம்பர் 19, 2025

அவதார் 4: டிசம்பர் 21, 2029

அவதார் 5: டிசம்பர் 19, 2031

அதாவது முதல் படம் வெளியாகி 22 வருடங்கள் கழித்து இந்த தொடரின் கடைசி படம் வெளிவரவுள்ளது.

மேலும் செய்திகள்