< Back
சினிமா செய்திகள்
வசூல் சாதனை படைக்கும் அவதார்-2 ..!
சினிமா செய்திகள்

வசூல் சாதனை படைக்கும் அவதார்-2 ..!

தினத்தந்தி
|
8 Jan 2023 11:16 AM GMT

அவதார் 2 திரைப்படம் 3 வாரங்களில் ரூ. 440 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த 16 ந்தேதி வெளியானது. அவதார்: தி வே ஆப் வாட்டர், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமான அவதாரின் தொடர்ச்சியாகும்.

இந்த நிலையில் அவதார் 2 திரைப்படம் 3 வாரங்களில் ரூ. 440 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்