< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
ரூ.12 ஆயிரம் கோடி வசூலித்த 'அவதார்-2'

3 Jan 2023 9:07 AM IST
உலகம் முழுவதும் அவதார்-2 படம் ரூ.12 ஆயிரம் கோடியை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009-ல் வெளியாகி ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கதாபாத்திரங்களும் ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தன. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
'அவதார்-2' திரைக்கு வந்த நாட்களில் இருந்தே வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ.41 கோடி வசூலித்தது. சில தினங்களுக்கு முன்பு வசூல் ரூ.7 ஆயிரம் கோடியை எட்டியதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் அவதார்-2 படம் ரூ.12 ஆயிரம் கோடியை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.